நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு தற்போது பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சுட்டிக்காட்டும் போது தம்மை நோக்கி இனவாத சாயம் பூசப்படுவதாகவும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் இன்றைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோடு இருப்பவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோடு இணைந்து கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாவது, “நாட்டின் தேசிய பாதுகாப்பு பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது. மீண்டும் புலிகள் தலைதூக்குகின்றனர். ஆர்ப்பாட்டங்கள் என்ற பெயரில் வடக்கில் மீண்டும் புலிகள் இயக்கம் தலைதூக்குகின்றது.
புலப்பெயர் புலி ஆதரவாளர்களினதும் கை ஓங்குகின்றது. இவ்வாறானதோர் சூழ்நிலையில் யுத்தத்தை முடித்து பயங்கரவாதத்தை ஒழித்த தலைவரென்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பாக அக்கறை செலுத்துகின்றார். மக்கள் மத்தியில் பேசுகின்றார். இதனை இனவாதம் பேசுவதாக முத்திரை குத்தி அரசியல் இலாபம் பெற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அணியினர் முயற்சிக்கின்றனர்.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: உதய கம்மன்பில