Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே அது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கொழும்பில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பு தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “பாராளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிடும் என்பது தொடர்பில் பலவாறு பேசப்பட்டு வந்தது. இவ்விடயத்தில் இன்னும் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படவில்லை. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அரசியல் சூழ்நிலைகளை அவதானித்த பின்னரே எந்த கட்சியுடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடும் என்பதை அறிவிப்போம்.

இந்திய வம்வாளி மக்களை பிரதிநிதித்துவப்படும் வகையில் தற்போதைய அரசியலமைப்பு பேரவையில் எவரும் உள்வாங்கப்படவில்லை. கடந்த அரசியலமைப்பு பேரவையில் ஒருவர் இருந்தார். ஆனால், இம்முறை எமது மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயத்தை ஜனாதிபதியின் கவனத்து கொண்டு சென்றோம். இந்திய வம்சாவளி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை அறிந்த ஒருவராக முன்னாள் அமைச்சரும், கோப்பியோ அமைப்பின் ஸ்தாபகருமான பி.பி.தேவராஜா உள்ளார். இவர் தற்போது அரிசியலில் ஈடுபடவில்லை. பொதுச் சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்திய வம்சாவளியினரை பிரதிநிதித்துவப்படும் ஒருவராக பி.பி.தேவராஜா உள்வாங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். இதேவேளை இவ்விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தெரிவித்துள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to பொதுத் தேர்தலில் யாரோடு கூட்டணி என்று இன்னும் தீர்மானமில்லை: இ.தொ.கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com