கனடாவில் தமிழர்கள் தங்களின் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக பிரதான வீதிகள் மூடப்பட்டு தமிழர் தெருவிழா இடம்பெறவுள்ளதையிட்டு கனடாத் தமிழர்கள் குதூகலத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அதுகூட இவ் விழா பற்றிய அறிமுகத்தை பாரிய ரொறன்ரோவின் முதல்வர் ஜோன் ரோறி அவர்களே நிகழ்த்தி வைத்தது கனடா வாழ் தமிழர்களிற்கு இரட்டிப்புச் சந்தோசத்தைக் கொடுத்துள்ளது.
கனடாவில் பாரிய நகரமான ரொறன்றோவின் முதல்வர் ஜோன் ரோறி அவர்கள் தனது அலுவலகத்தில் வைத்துள்ள பிரதான படங்கள் ஒன்று இரண்டில் முக்கியமானதானக தான தமிழர்களுடன் விநாயகர் ஆலயத்தில் வழிபடும் படத்தை பிரதானமாக வைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தாலி, ஜேர்மனி, கிரேக்கம், பிரேசில், பிரான்ேஸ் போன்ற நாடுகளிலிருந்து கனடாவிற்கு வந்தவர்களும், கரிபிய தேசத்தவர்களும் நடாத்தும் கர்ணவாலே அல்லது கார்னிவல் என்ற நிகழ்ச்சிக்கு ஈடாக கோடைகாலத்தில முக்கியமானதொரு வாரத்தில் சனி, ஞாயிறு தினங்களில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வு வருடாந்தம் இடம்பெறவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் ரொறன்ரோவில் என்றல்ல ஒன்றாரியோ மாகாணத்தில் மற்றும் கியூபெக் மாகாணத்தில் வாழும் கனடியர்கள், வேற்று இனத்தவர்கள் எனப் பலரும் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்வதுடன், கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கவுள்ளனர்.
ஆசியாவுக்கு வெளியே முதலாவது தமிழ்த் தெரு விழா பற்றிய அறிவிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற போது, ரொறன்ரோ மாநகரத் தலைவர் திரு. யோன் ரோறி அவர்கள் தமிழ்த் தெருவிழா நிகழ்வின் அறிவிப்பை வெளியிட்டதோடு நிகழ்விற்கான தனது பூரண ஆதரவையும் தெரிவித்தார்.
ஒன்ராறியோ மாகாண முதல்வர் மதிப்புக்குரிய கத்தலின் வின் அவர்கள் நேரில் வர இயலாத போதிலும் காணொளி வாயிலாகத் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்ததார்.
தமிழ்த் தெருவிழா 2015 ஊடாக நாம் அனைவரும் இணைந்து ஒன்ராறியோவின் பல்கலாச்சாரத் தன்மையைக் கொண்டாடுவதோடு அனைவரையும் உள்வாங்கிய பல்கலாச்சாரக் சமூகத்தைக் கட்டியெழுப்பவும் முடியும் என அவரது செய்தியில் தெரிவித்தார்.




0 Responses to கனடாவைக் கலக்கப் போகும் தமிழர் “தெருவிழா”. ஆர்ப்பரித்துள்ள தமிழர்கள்!!