Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெரும் குழப்பத்துக்கு மத்தியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒருங்கிணைப்பதற்காக 8 பேரடங்கிய குழுவொன்றை கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அமைத்துள்ளார்.

எஸ்.பி.திஸாநாயக்க தலைமையிலான இந்தக் குழுவில் ராஜித சேனாரத்ன, மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, ரெஜினோல்ட் குரே, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜனக பண்டார தென்னக்கோன், திலங்க சுமதிபால ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குமிடையில் நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தைத் தயார் செய்யும் பொறுப்பும் இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 8 பேரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது என சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குறித்த 8 பேரடங்கிய குறித்த குழுவினருக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நாளை திங்கட்கிழமை முக்கிய சந்திப்பொன்றும் நடத்தப்படவுள்ளது.

ஏற்கனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முகமாக 6 பேரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

0 Responses to சுதந்திரக் கட்சியை ஒருங்கிணைப்பதற்கு 8 பேரடங்கிய குழு; மைத்திரி அமைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com