Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறைத் தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனைப் பெற்று வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு திடீரென்று சிறுநீர்த் தொற்றுஏற்பட்டது. இதையடுத்து அவர் வேலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு கடந்த திங்கள் அன்று கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கிச்சை மற்றும் முழு உடல் பரிசோதனை நடைப்பெற்றது. ரத்த மாதிரி, சிறு நீர் மாதிரிகளை சோதனைக்கு எடுத்துக்கொண்ட மருத்துவர்கள் பேரறிவாளனை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் பேரறிவாளனுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட்டதாகத் தெரிய வருகிறது.இதையடுத்து இன்று மீண்டும் அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஒரு வாரத்துக்குத் தேவையான மருந்துகளை எழுதி கொடுத்துள்ளனர்.. பின்னர் பாதுகாப்பாக மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பேரறிவாளன்.

0 Responses to பேரறிவாளனுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com