Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமைச்சரவை அங்கீகரித்துள்ள புதிய தேர்தல் சீர்திருத்தம் உள்ளடங்கியுள்ள 20வது திருத்தச் சட்டத்தில் உடன்பாடில்லை என்று அறிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறுபான்மையின மற்றும் சிறுகட்சிகளின் பிரதிநிதித்துவத்தை புதிய தேர்தல் சீர்திருத்தம் கேள்விக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள 20வது திருத்தச் சட்டத்தின் தற்போதைய வடிவம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டால் அதனை எதிர்த்து வாக்களிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேரில் எடுத்துரைக்கவும் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டம் கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்றபோது மேற்படி முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 20வது திருத்தச் சட்ட வடிவம் அங்கீகரிக்கப்பட்டது. இந்தத் திருத்தச் சட்டத்தில் தேர்தல் முறைமை மறுசீரமைப்பில், தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடையக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த சிறுபான்மையினர் - சிறு கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த 20வது திருத்தச் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த 20வது திருத்தச் சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, தற்போதைய வடிவத்தில் 20வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டால் அதனை எதிர்ப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to அமைச்சரவை அங்கீகரித்துள்ள புதிய தேர்தல் சீர்திருத்தத்திற்கு கூட்டமைப்பு எதிர்ப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com