Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் சட்ட ஆட்சி, மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் நம்பகத்தன்மை என்பன அதிகார வரம்புக்கு உட்பட்ட வகையில் சர்வதேச மட்டத்திற்கு தரமுயர்த்தப்படுதல் அவசியம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலத்திற்கு பொருந்தக் கூடிய வகையில் புதிய, நவீன சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது இன்றியமையாதது என சுட்டிக்காட்டிய பிரதமர், புதிய சட்ட வாக்கத்தின் போது இங்கிலாந்தில் நடைமுறையிலுள்ள ஆங்கில (இங்லீஸ்) சட்டம், அமெரிக்கச் சட்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டம் ஆகியவற்றை கருத்திற் கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் சர்வதேச மத்தியஸ்த சபை நேற்று வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நிறுவப்பட்டுள்ள சர்வதேச மத்தியஸ்த சபை வெற்றிகரமாக செயற்பட வேண்டுமாயின், மூன்றாவது பரம்பரையினர் வரும் வரை காத்திராமல் வாணிப மேல் நீதிமன்றத்தின் வழக்குகள் யாவும் உடனுக்குடன் விசாரணைக்கு உற்படுத்தப்படும் வகையில் விறுவிறுப்புடன் செயற்படுத்துவதன் மூலம் புது தோற்றப் பொலிவை பெறுவதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பிரதமர் இச்சந்தர்ப்பத்தில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு பணிப்புரை விடுத்தார்.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் உச்ச நீதிமன்றத்தை கட்டுப்படுத்தும் செயற்பாட்டிலிருந்து நாம் என்றோ விலகி விட்டோம்” எனத் தெரிவித்த பிரதமர், உச்ச நீதிமன்றம் சுயமாக இயங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். கட்டுப்பாடுகள் இருக்க கூடாது. எனினும் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார்.

உலக வர்த்தக மையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, முன்னாள் நீதியமைச்சரும் தற்போதைய நகர அபிவிருத்தி நீர்விநியோக வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Responses to சொந்தக் காணிகளில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதமிருந்தவர்கள் கைதாகி விடுதலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com