அடுத்த வருடம் நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடும் முன்னால் பாதுகாப்புச் செயலாளரான ஹிலாரி கிளிங்டனுக்குக் கடும் போட்டியாக முன்னால் அதிபர் ஜோர்ஜ் புஷ் இன் மகன் ஜெப் புஷ் களமிறங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்புக் கூடியுள்ளது.
ஒபாமாவுக்கு முன் அதிபராக விளங்கிய ஜோர்ஜ் W புஷ் இன் இளைய சகோதரரான ஜெப் புஷ் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் முன்னால் கவர்னரும் ஆவார். தேர்தல் செலவு, ஊடக ஆதரவு, மற்றும் அரசியல் அனுபவம் போன்ற தகுதிகளை ஜெப் புஷ் கொண்டுள்ளார் என்பதுடன் ஹிலாரிக்கு இணையாக இவரும் பல ஆதரவாளர்களையும் உடையவர் ஆவார். ஏற்கனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் லூயிஸியானா மாகாணத்தின் ஆளுனருமான பாபி ஜிண்டால் என்பவரும் குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதுடன் தனது பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறார்.
இதை விட ரியல் எஸ்டேட் அதிபரும், தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஸ்டாருமான டோனால்ட் ட்ரும்ப் என்பவரும் அதிபர் தேர்தலில் களம் இறங்கியிருப்பதுடன் தனது பிரச்சாரத்தை இன்று செவ்வாய்க்கிழமை அவரும் ஆரம்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்குக் கடும் போட்டியை ஏற்படுத்துவாரா ஜெப் புஷ்?