சிரியாவிலும் ஈராக்கிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ISIS போராளிகள் ஆப்கானிஸ்தானிலும் ஆதிக்கம் செலுத்தலாம் என எண்ணுவது நல்லதல்ல என ISIS தலைவன் அல் பக்தாதிக்கு ஆப்கானிஸ்தானில் பலம் பொருந்திய போராளி அமைப்பான தலிபான்கள் இன்று செவ்வாய்க்கிழமை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீப காலமாக ஆப்கானிஸ்தானில் ஊடுருவியுள்ள ISIS இயக்கத்துக்கு விசுவாசமான போராளிகளுடன் ஏற்பட்டிருந்த தொடர் மோதல்களை அடுத்தே தலிபான்கள் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.
டாயேஸ் (Daesh) என அரபு மொழியில் அழைக்கப் படும் ISIS போராளிக்குழு இதற்கு முன் ஆப்கானிலும் தமது போராளிகள் இருப்பதாக அறிவித்ததேயில்லை. ஆனால் சமீப காலமாக இந்த நிலை மாறி வருவதாகவும் ஆப்கானில் அவர்கள் நுழைவதற்கான வழிகள் திறக்கப் பட்டு வருவதாகவும் அஞ்சப் படுகின்றது. இந்நிலையில் தலிபான்கள் இந்த எச்சரிக்கையை அல் பக்தாதிக்குக் கடிதம் வாயிலாக விடுத்துள்ளதுடன் அக்கடிதத்தின் பிரதியானது தலிபான்களின் இணையத் தளத்தில் பஷ்ட்டோ, உருது, அரபிக் மற்றும் டாரி ஆகிய மொழிகளில் வெளியிடப் பட்டுள்ளது. இக்கடிதத்தில் தெரிவிக்கப் பட்ட சுருக்கமான விபரம் வருமாறு:
'அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான புனிதப் போரானது (ஜிஹாட்) ஒரே கொடியின் கீழ் ஒரே தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப் பட வேண்டும். முஸ்லிம்களுக்கோ அல்லது புனிதப் போருக்கோ நண்மை தரத் தக்கதாக இருந்தாலும், பல் வகைப் பட்ட ஜிஹாதி குழுக்களை உலகின் ஒரே இஸ்லாமிய இராச்சியமான (தலிபான்கள்) ஏற்பதில்லை! மிகத் தூரத்தில் இருந்து நீங்கள் தன்னிச்சையாக எடுக்கக் கூடிய முடிவுகள் காரணமாக நிச்சயம் மதத் தலைவர்கள் மற்றும் முஜாஹிடீன்களின் ஆதரவை இழப்பீர்கள்!'
குறித்த இந்த கடிதம் தலிபான்களின் பிரதித் தலைவரான முல்லா அக்தார் மொஹம்மட் மன்சூரால் கையெழுத்திடப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆப்கானிஸ்தானில் ISIS தலையிடுவது நல்லதல்ல!:அல் பக்தாதியை எச்சரித்த தலிபான்கள்!