Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன், சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் கல்விக் கண்காட்சி பாடசாலையின் அதிபர் ரி.யோகராஜா தலைமையில் கடந்த 22ம் நாள் நடைபெற்றது.

இந்தநிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டு கண்காட்சியினை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில்,

தேடல்களின் வெளிப்பாடாகவும் சிந்தனைகளின் தொகுப்பாகவும் பாடசாலைகளில் நடக்கின்ற கண்காட்சி வைபவம் ஒன்றில் கலந்திருப்பதில் மகிழ்ச்சி.

கண்காட்சிகள் வெறுமனே பார்வைக்கு மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தருகின்றவையாக மட்டுமன்றி, அவை அந்தந்த சமூகத்தின் அடையாளங்களை உலகம் பற்றிய அனுவத்தையும் வெளிக்காட்டுகின்றனவாக அமையவேண்டும்.

இந்த பாடசாலையின் கண்காட்சியில் அந்த சிந்தனை வெளிப்படுவதை நாம் காணமுடியும். நவீன உலகத்தையும் தொன்மத்தையும் கலந்து செய்த கலவையாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

இன்று நம் பாவனைகளில் அற்றுப்போயிருக்கின்ற நமது அன்றைய பழக்கவழக்கங்களை பண்பாட்டை வெளிப்படுத்தும் பாத்திரங்கள் ஆயுதங்கள் பாவனைகள் இங்கே காட்சிப்படுத்த எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது.

இன்று நம்மில் எத்தனைபேருக்கு மூக்குப்பேணி தெரியுமோ தெரியவில்லை. ஏன் உரல், உலக்கை, அம்மி போன்றவற்றையும் இன்று வீடுகளில் காண்பது அருகிவருகின்றது.

மேலைத்தேய நாகரிகம் இயந்திர மயம் எம் வாழ்க்கையையும் ஆக்கிரமித்துள்ளது. கைக்குத்தரிசியை தேடவேண்டியிருக்கின்றது.

இன்னும் சில காலம் போக நாம் பாக்கு வெட்டிகள், உரல், உலக்கை, அம்மி என்பவற்றையும் கண்காட்சியில் வைத்து நம் சந்ததிக்கு விளங்கப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம் என தெரிவித்தார்.

இந்த கண்காட்சி நிகழ்வில் வலிகாமம் தெற்கு பிரதேசசெயலர் பிரசாத், உதவிக் கல்விப் பணிப்பாளர் தர்மலிங்கம், புன்னாலைக்கட்டுவன் பிரதேச தமிழரசுக்கட்சியின் கிளைத்தலைவர் லோகன் ஆகியோரும் விருந்தினர்களாக வருகை தந்திருந்தனர்.

0 Responses to அறிவியல் தொன்மத் தேடல் நம் பிள்ளைகளிடம் உள்ளது: எம்.பி சிறீதரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com