ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் பதவியேற்று ஐந்து மாதங்களைக் கடந்த நிலையில் பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு (யூன் 26) கலைக்கப்பட்டது.
தேசிய அரசாங்கம் முன்னெடுத்த 100 நாட்கள் வேலைத்திட்டம் நிறைவுற்றதும் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிவித்திருந்த போதும், 19வது திருத்தச் சட்டத்தின் நிறைவேற்றம் உள்ளிட்ட சில காரணங்களினால் அது தாமதமானது. ஆன போதிலும், தேர்தல் சீர்திருத்தத்தை வலியுறுத்தும் 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாத நிலையிலேயே, பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதியின் உத்தரவு அடங்கிய வர்த்தமானி அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் வெளியிட்டப்பட்டது. அதில், பொதுத் தேர்தலுக்கான திகதி ஒகஸ்ட் 17 என்று குறிப்பிடப்பட்டுள்ளதோது, புதிய பாராளுமன்றம் செப்டம்பர் 01ஆம் திகதி கூட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொதுத் தேர்தல் மும்முனைப் போட்டிக் களமாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஒரு அணியிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி இன்னொரு அணியிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவுக் கட்சிகள் மற்றைய அணியாகவும் போட்டியிடும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
பொதுத் தேர்தலுக்கும் பின்னரான ஆட்சியமைக்கும் கூட்டில் சிறுபான்மைக் கட்சிகள் முக்கிய பங்களிப்பைச் செலுத்தும் சூழல் காணப்படுகின்றது. இதன்பிரகாரம், சிறுபான்மைக் கட்சிகளும் தமது வெற்றியை தக்க வைப்பதில் பெரும் ஆர்வத்தோடு செயற்படுகின்றன.

0 Responses to 20வது திருத்தம் நிறைவேற்றப்படவில்லை; பாராளுமன்றம் கலைப்பு; மும்முனைப் போட்டி!