Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் வலுவான அரசியல் பிணைப்பு காணப்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் ஒருபோதும் ஆரம்பத்தை மறந்துவிட முடியாது என்று குறிப்பிட்ட அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்த அனைவரும் நம்பிக்கை இழக்க வேண்டாம். அவர் ஒருபோதும் நாட்டுப் பிரிஜைகளைக் காட்டிக்கொடுக்க மாட்டார்“ என்று கூறியுள்ளார்.

திஸ்ஸமஹாராம – சியபலாவெவ கமநல அமைப்பிற்கு நிதி உதவி வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையில் வலுவான அரசியல் பிணைப்பு: சஜித் பிரேமதாஸ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com