Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்று அக்கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 27ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள அத்தொகுதியில் அதிமுக சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். திமுக, பாமக, தமாக ஆகிய கட்சிகள் தேர்தலில் களம் இறங்கபோவதில்லை என்று ஏற்கனவே தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டத்தின் படி சுதந்திரமாக பாரபட்சமின்றி நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு துணை போவது அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துமீறல்களையும் ஒரு தலைபட்சமான நடவடிக்கைகளையும் ஆளுங்கட்சியினர் அரங்கேற்ற ஆரம்பித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். பணம் விநியோகம் செய்வதை அனுமதிக்கமாட்டோம் என தேர்தல் ஆணையம் உறுதி மொழி அளித்தால் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என ஏற்கனவே தாம் கூறியிருந்ததற்க்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

எனவே இத்தகைய ஜனநாயக சட்ட விரோதமான அசாதாரன சூழலை தடுத்து நிறுத்திட தேர்தல் ஆணையம் முற்றிலும் தவறி விட்டதால் ஆர்.கே.நகர் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்றும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியில்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com