Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லிணக்க அடிப்படையில் அரசியலில் இணைந்திருந்தாலும் விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர்களும் அவர்கள் மேற்கொண்ட குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவார்கள் என்று  பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

2000ஆம் ஆண்டு டிசம்பரில் யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 பொதுமக்களை கொலை செய்த இராணுவ வீரருக்கு, கடந்த வாரம் கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதன் பின்னணியில் முன்னாள் பிரதியமைச்சர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன், விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் ஆகியோர் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கே சுஜீவ சேனசிங்க தமது பதிலை வழங்கியுள்ளார்.

குற்றங்கள் நிரூபிக்கப்படும் போது குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது சட்டநியதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் சந்தேகத்துக்கு உரியவர்களுக்கு, நாட்டின் சமாதான அடிப்படையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுப்படவுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to முன்னாள் விடுதலைப்புலி தலைவர்களும் தண்டிக்கப்படுவர்: பிரதி நீதியமைச்சர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com