Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு சார்பு மாகாணசபை உறுப்பினர்களினில் ஒருசாராரும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் நோக்கம் இல்லையென கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளில் மாற்றம் இல்லை என்றும் மைத்திரிபால அரசாங்கத்துக்கு துணைபோகும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதால் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடியாது எனவும் முன்னணி தெரிவித்துள்ளதுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளதாகவும் அந்த மூத்த உறுப்பினர் கூறினார்.

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சின்னத்தில் போட்டியிடவுள்ளார் என்றும், அதற்கான பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் முன்னணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டமைப்பு பிரபலங்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com