சமீபத்தில் சவுதி அரேபியா சென்று திரும்பிய நபர் ஒருவராலும் அல்லது வேறு சில அடையாளம் தெரியாத காரணங்களாலும் MERS எனப் படும் ஆட்கொல்லி வைரஸ் தென்கொரியாவில் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது.
இதனால் உலக சுகாதாரத் தாபனமான WHO தென்கொரியாவில் MERS வைரஸ் மிக வேகமாக வளரும் அபாயம் இன்னமும் இருப்பதால் மக்கள் வெகு கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளது.
இன்று புதன்கிழமை வரைக்கும் இந்த நோயின் தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படும் 1369 பேர் அங்கு தனிமைப் படுத்தப் பட்ட சூழ்நிலையில் வைக்கப் பட்டுள்ளனர். மேலும் MERS ஆட்கொல்லி வைரஸ் தொற்றினால் இதுவரை தென்கொரியாவில் 3 பேர் பலியாகி இருப்பதும் சுமார் 35 பேருக்கு இதன் தாக்கம் அதிகளவில் இருப்பதும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. கொரியாவின் நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவு மிக அண்மையில் MERS தொற்றுக்கு உள்ளான புதிய 5 வகை நோயாளர்களை இனம் கண்டதுடன் இதனுடன் சேர்த்து மொத்தம் 35 பேர் வைத்திய சாலையில் தனிமை சூழ்நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகின்றனர்.
நோய்த் தடுப்பு நிபுணர்களின் கருத்துப் படி தென்கொரியாவின் சுகாதாரத் திட்டங்கள் நன்கு ஒழுங்கமைக்கப் பட்டு மிகக் கட்டுப்பாட்டுடன் இயங்கும் தருணத்திலும் MERS வைரஸ் இந்தளவுக்கு வேகமாக அங்கு மனிதர்கள் மத்தியில் பரவியிருப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. MERS வைரஸின் தாக்கத்தால் அங்கு 900 இற்கும் அதிகமான பள்ளிகள் மூடப் பட்டுள்ளதாக தென்கொரிய கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தலைநகர் சியோலில் எங்கு பார்த்தாலும் முகத்தை துணியால் மறைத்துச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
மேலும் தற்போது உலகில் சவுதி அரேபியாவுக்கு வெளியே MERS வைரஸால் கடுமையாகப் பாதிக்கப் பட்ட நாடாக தென் கொரியா மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 2012 ஜூனில் முதன்முறை சவுதி அரேபியாவில் இனம் காணப் பட்ட MERS வைரஸுக்கு உலகம் முழுதும் இதுவரை 1161 பேர் பாதிக்கப் பட்டுள்ளதுடன் 436 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்தோ குணப்படுத்தும் மருந்தோ கண்டு பிடிக்கப் படவில்லை.

0 Responses to தென்கொரியாவில் படுவேகமாகப் பரவும் MERS வைரஸ்!:1369 பேர் தனிமைப் படுத்தப் பட்டனர்!