Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மியான்மாரில் சிறுபான்மை பூர்விக ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது பௌத்த மத வெறியர்கள் மற்றும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் இனப் படுகொலை, மனித உரிமை மீறல் சம்பவங்களைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் இது தொடர்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எதிர்வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமது கட்சி சார்பில் மாலை 3 மணிக்கு பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப் படும் என நாம் தமிழர் கட்சி சார்பாக சீமான் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மியான்மாரில் தமது அடிப்படை உரிமைகள் மீறப் படுவதாலும் வாழும் உரிமை மறுக்கப் படுவதாலும் பெருமளவிலான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாகப் படகுகள் மூலம் தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை நோக்கி அண்மைக் காலமாக ஆயிரக் கணக்கில் வெளியேறி வருகின்றனர். இவர்கள் நடுக்கடலில் ஏஜண்டுக்களால் கைவிடப் பட்டு நூற்றுக் கணக்கில் இறந்தும் வருகின்றனர். மேலும் இவ்வாறு அகதிகளாக வெளியேறிப் பிடிபட்டவர்களை மியான்மார் அரசும் கடுமையாகத் தண்டித்து வருகின்றது. இதனால் சர்வதேசத்தின் கவனம் தற்போது  மியான்மார் மற்றும் வங்கதேச சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்கள் வசம் திரும்பியுள்ளது.

இந்நிலையில் இந்த மக்களுக்கான விடிவை சர்வதேசமும் ஜனநாயக நாடுகளும் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துவதுடன் மறுபுறம் சென்னையிலுள்ள இந்திய தொழிநுட்பக் கல்லூரியில் செயற்பட்டு வரும் அம்பேத்கார் - பெரியார் குழுவுக்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை விதித்துள்ள தடை நீக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கப் பட்டு நாம் தமிழர் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

0 Responses to ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி வெள்ளி ஆர்ப்பாட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com