Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தங்காலை மெதமுலனவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியலுக்கான மீள் வருகை தொடர்பிலான அறிவித்தல் கூட்டத்தில் 100 வரையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், 20 வரையிலான சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களே கலந்து கொண்டிருந்தனர்.

சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால.டி.சில்வா, பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா, அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கலந்துகொண்டு தனக்கு ஆதரவு வழங்குவார்கள் என மஹிந்த ராஜபக்ஷ எண்ணியிருந்தபோதும், அவர்கள் கலந்துகொள்ளாமை குறித்து அவர் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிகின்றது.

முன்னாள் ஜனாதிபதியை அழைப்பு விடுவதற்காக 100ற்கும் அதிகமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மெதமுலன செல்லவிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் முன்னர் அறிவித்திருந்தனர். எனினும், 20 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இதில் கலந்துகொண்டிருந்தனர்.

கலந்துகொண்டவர்களில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, குமார வெல்கம, மஹிந்தானந்த அழுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்த்தன, எஸ்.எம்.சந்திரசேன, ஆர்.துமிந்த சில்வா, மாலினி பொன்சேகா, பவிந்திரா வன்னியாராச்சி, கமலா ரணதுங்க, டி.பி.ஏக்கநாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, ஹெகலிய ரம்புக்வெல்ல, சந்திம வீரக்கொடி, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, நிஷாந்த முத்துஹெட்டிகம, திஸ்ஸ கரலியத்த, மனுஷ நாணயக்கார, திஸ்ஸ வித்தாரண, சரண குணவர்த்தன ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாகும்.

அத்தோடு, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் உள்ளிட்ட மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா உள்ளிட்ட சிலரும் இதில் கலந்துகொண்டி ருந்தனர்.

நாட்டை மீண்டும் பொறுப்பேற்குமாறு இவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்ததுடன், அந்த அழைப்பை தான் நிராகரிக்கப்போவதில்லையென்றும் கூறியிருந்தார். இதனைவிட பிரதமர் வேட்பாளராகவோ, கட்சித் தலைவராகவோ தான் போட்டியிடப்போவதாகவோ மஹிந்த ராஜபக்ஷ தனது உரையில் குறிப்பிடவில்லை.

0 Responses to மஹிந்தவின் மெதமுலன கூட்டத்தில் 20 வரையிலான சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களே பங்கேற்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com