மக்களினால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது எமக்கு பிரச்சினையான ஒன்றல்ல. நாம் பெரும்பான்மையுள்ள அரசாங்கமொன்றை அமைப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும், நீதி அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த ஒருவர் மீண்டும் பொதுத் தேர்தலொன்றில் போட்டியிட்ட சந்தர்ப்பம் இலங்கை வரலாற்றில் இதுவரைகாலமும் இடம்பெறவில்லை. மீண்டும் பொதுத் தேர்தலொன்றில் போட்டியிடுவதென்பது ஜனாதிபதி ஒருவருக்கும் பொருந்தாததொன்று. அரசியலுக்கு மீண்டும் வருவதே மிகவும் பொருத்தமற்ற விடயம். அதுமட்டுமன்றி, ஜனாதிபதி பதவிக்கும் செய்யும் அகெளரவமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது எமக்குப் பிரச்சினை இல்லை. இதுபோன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபடுபவர்களை தொடர்ந்தும் அரசியலில் வைத்திருப்பதா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பர். நாம் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்போம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்த வருவதால் பிரச்சினையில்லை; நாம் பெரும்பான்மை அரசமைப்போம்: விஜயதாச ராஜபக்ஷ