Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோகரான சுசன் ரைஸ் இன்று வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் இருந்து மேற்கொண்ட ஊடகப் பேட்டியின் போது, தென் சூடான் அங்கு நிகழ்ந்து வரும் குழப்பநிலை மற்றும் வன்முறையின் உச்சக் கட்டத்தை உடனே தீர்ப்பதற்கு முன் வர வேண்டும் என அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

மேலும் தென்சூடானில் அளவுக்கு மீறிப் போய்க் கொண்டிருக்கும் வன்முறையை நிறுத்த அந்நாட்டு அதிபர் சால்வா கீர் அல்லது கிளர்ச்சித் தலைவர் ரியெக் மச்சார் ஆகியோர் எதுவுமே செய்ததில்லை என சுசன் ரைஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.

அண்மையில் உதித்த உலக நாடான தென்சூடான் தனது 4 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அனுட்டிப்பது தொடர்பில் வீடியோ செய்தி மூலம் இக்கோரிக்கைகளை சுசன் ரைஸ் முன் வைத்திருந்தார். இதன் போது அவர் சூடான் சுதந்திரமடைந்த 4 ஆண்டுகளில் அங்கு முற்றியுள்ள குழப்ப நிலை தனது இதயத்தையே கிழித்து போன்ற உணர்வை ஏற்படுத்தியிருப்பதாகவும் தென் சூடானில் அனைத்துத் தரப்பும் வன்முறையை உடனே கைவிட்டு விட்டு ஓர் இடைக்கால அரசை அமைக்க இணங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பல தசாப்தங்களாக நீடித்த சூடான் உள்நாட்டுப் போரின் பின் 4 வருடங்களுக்கு முன் உதயமான தென்சூடானின் முதல் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க ஜுபாவுக்கு சுசன் ரைஸும் சென்றிருந்தார்.

தென் சூடான் உதயமான பின்னர் டிசம்பர் 2013 இல் நடைபெற்ற சிவில் யுத்தத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டதும் 2.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அங்கு தொடர்ந்து இடம்பெற்று வரும் வன்முறையைப் போக்க கடந்த 19 மாதங்களாக அரசு எதுவும் செய்யவில்லை என்றும் சுசன் ரைஸ் குற்றம் சாட்டியதுடன் அங்கு குழப்பத்தைத் தீர்த்து பிராந்திய ஒத்துழைப்பை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் அரசு இன்னமும் மௌனமாக இருந்து தென் சூடானை தொடர்ந்து வன்முறையில் மூழ்க வைத்திருக்க முயல்பவர்களை அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் தண்டிக்கவும் தயாராக இருப்பதாகவும் ரைஸ் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to குழப்ப நிலையை விரைந்து தீர்க்குமாறு தென் சூடானுக்கு வெள்ளை மாளிகை அறிவுறுத்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com