ஹெல்மெட் கட்டாயம் எனும் நடவடிக்கையை அடுத்து மோட்டார் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி கட்டாயம் எனும் நடவடிக்கையை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
கடந்த 1ம் திகதி முதல் இரு சக்கர மோட்டார் வாகன ஓட்டிகள் மற்றும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் தமிழக உத்தரவுப் பிறப்பிக்க அறிவுறுத்தியது. இதையடுத்து தமிழக அரசும் இரு சக்கர மோட்டார் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று 1ம் திகதி முதல் இத்திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் அனைத்து மோட்டார் வாகனங்களிலும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில், வாகனங்களுக்கு வேகக் கட்டுபாட்டுக் கருவி அவசியம் என்கிற நடவடிக்கையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஏற்கனவே வாகனச் சட்டத்தில் இப்பிரிவு அமலில் உள்ளதால், இதுக்குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தாத வாகனங்களுக்கு மோட்டார் விதிமுறை சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

0 Responses to ஹெல்மெட் கட்டாயம் எனும் நடவடிக்கையை அடுத்து மோட்டார் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி!