எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையேற்கும் கூட்டணியில் இணைந்து போட்டியிடவுள்ளது.
இதன்பிரகாரம், தமிழ் முற்போக்குக் கூட்டணியில் 9 வேட்பாளர்கள் நுவரெலியா, கொழும்பு, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.ராதாகிருஸ்ணன், தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் எம்.திலகராஜ் ஆகியோரும் கண்டி மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவர் வேலுக்குமார், பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளர் ஏ.அரவிந்குமாரும் போட்டியிடவுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியினதும், தமிழ் முற்போக்குக் கூட்டணியினதும் தலைவர் மனோ கணேசன், ஜனநாயக மக்கள் முன்னணி உப செயலாளர் சண்.குகவரதன், இரத்தினபுரி மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் எம்.சந்திரகுமார் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி கம்பஹா மாவட்ட செயலாளார் எஸ.சசிகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

0 Responses to தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐ.தே.க. கூட்டணியில் போட்டி!