Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களுக்கு முன்னர் யுவதி ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீமூட்டி தற்கொலைக்கு முயற்சி செய்திருந்தார். எனினும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

ஐந்து நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்ட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மரணடைந்தார்.

இம்மாணவி பற்றி தெரியவருவதாவது,

முல்லைத்தீவு செல்வபுரத்தை சேர்ந்த இந்த மாணவி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் ஒருவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்திருந்தார். இருவரும் யாழ் நகரத்திற்கு அண்மையாக வீடெடுத்து தங்கியிருந்தனர்.

காதலித்து திருமணம் செய்தபோதும், இருவருக்குமிடையில் தினம்தினம் சண்டை நடப்பதாக அறிய முடிகிறது. தனது மனைவி மீது வைத்தியர் அதீத கட்டுப்பாடும், கண்காணிப்பும் வைத்திருந்ததும் சச்சரவிற்கான காரணங்களிலொன்றாக கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே திடீரென தனக்குதானே தீமூட்டியுள்ளார். வைத்தியசாலையில் ஆரம்பத்தில் வழங்கிய வாக்குமூலத்தில் இதனை தானே செய்ததாக மாணவி கூறியிருக்கிறார். எனினும், இறக்கும் தறுவாயில் தன்மீது எண்ணெய் ஊற்றிகொளுத்தப்பட்டதாக மாணவி கூறியதாக உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

மாணவியின் முதுகுப்பகுதியில் தீமூட்டப்பட்டுள்ளதால் அதனை மாணவி செய்திருக்க வாய்ப்பில்லையென்றும், இது திட்டமிட்ட கொலையென்றும் மாணவியின் உறவினர்களால் கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் மருத்துவதாதி கற்கைநெறியொன்றை (MLT) பயின்று வந்த லோறன்ஸ் அனா எப்சியா (வயது-24) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

0 Responses to மாணவி அனா எப்சியா தற்கொலை செய்தாரா? கொலை செய்யப்பட்டாரா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com