கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி நாட்டு மக்கள் அமைதியான முறையில் ஏற்படுத்திய புரட்சியை பின்னோக்கி இழுப்பதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை-ஹம்பாந்தோட்டை பகுதிக்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு மாத்தறையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தெரிவித்துள்ளதாவது, “நான் அரசியலுக்குள் இடையில் நுழைந்தவன் அல்ல. எனக்கு 49 வருடகால அரசியல் அனுபவம் இருக்கின்றது. கட்சி தீர்மானத்தின் போது ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஏற்பட்ட மேம்பாட்டுக்கு பங்கம் ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டேன். அதனை நான் பாதுகாப்பேன். இந்நாட்டில் வாழ்கின்ற சகலருக்கும் நியாயம் மற்றும் நீதி கிடைப்பதற்கு வழிசமைத்து, குடும்ப ஆட்சியின்றி நல்லாட்சியை உருவாக்குவேன்.” என்றுள்ளார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட புரட்சியை பின்னோக்கி இழுக்க இடமளியேன்: ஜனாதிபதி