எல்லையில் பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் அனீஸ் உடல் இன்று அவரது சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தது.
கடந்த புதன் கிழமை அன்று, எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இந்திய வீரர்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கன்னியாகுமரியை சேர்ந்த தமிழக வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.இவரது பெயர் அனீஸ், இவரது உடல் இன்று தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து கன்னியாகுமரி அருகில் உள்ள வீரரின் சொந்த கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது.இவரது உடலுக்கு அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் அதிமுக எம்எல்ஏ மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.
அனீஸின் குடும்பத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ரூபாய் 10 லட்சம் காசோலை வழங்கினார் என்றும்,அவரது சார்பாக அந்த காசோலையை கோகுல இந்திரா அனீஸ் குடும்பத்தாரிடம் கொடுத்தார் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to எல்லையில் உயிரழந்த தமிழக வீரரின் உடல் சொந்த ஊருக்கு வந்தது