Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருகோணமலையில் ஆறு கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன. அதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் மாலை 2.30 மணியளவில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான தமது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

அதில்
01. திரு இரா.ஞானேஸ்வரன் (முதன்மை வேட்பாளர்)

02. திரு கே.தங்கேஸ்வரன்

03. திரு இரா.ஜீவேந்திரன்

04. திரு ஞானகநேசன் கேதீஸ்வரன்

05. திரு எஸ்.சந்திரகுமார்

06. எஸ்.செல்வகுமாரி

07. ஆருமுகதாஸ் வாசுகி ஆகியோர்

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் அக்கட்சியின் முதன்மை வேட்பாளரும் மலை முரசு வாரப்பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான ஞானேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய இலங்கைக்குள் தனித்தமிழ் தேசமே தமிழர்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வாக அமையும். அதனையே தமது கொள்கையாகக் கொண்டு நாடாளுமன்றத்தில் தமிழர்களின் குரலை ஒலிக்கச் செய்வோம் என அவர் தெரிவித்தார்.

0 Responses to திருகோணமலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வேட்புமனு தாக்கல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com