அதிமுக எம்எல்ஏவும் தமிழக முன்னாள் அமைச்சருமான செந்தூர் பாண்டி இன்று காலை உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
64 வயதாகும் செந்தூர் பாண்டி கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். கோமா நிலையில் கடந்த சில மாதங்களாக இருந்த அவர், நினைவு திரும்பாமலே இன்று காலை உயிரிழந்தார்.இப்போதைய அதிமுக ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டி, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது, வேறு வழியின்றி அவரது பதவியை ஜெயலலிதா வேறு ஒருவருக்கு மாற்ற நேர்ந்தது.
ஆனால், அவரது எம்எல்ஏ பதவி கைவசம் இருந்த நிலையில், அவர் இன்று உயிர் நீத்துள்ளார்.இவரது மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

0 Responses to முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டி மரணம்