மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ள போதிலும், குறித்த வேட்புமனு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இறுதி செய்யப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இறுதி நேரத்தில் வேட்புமனுவில் எந்த மாற்றமும் இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்புமனு தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு யோசனையொன்றை வழங்கியுள்ளோம். இதற்கு மாற்றமாக மோசடி குற்றச்சாட்டுள்ளவர்களுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டால், சுதந்திரக் கட்சியிலிருந்து விலகுவதா, மாற்று முடிவு எடுப்பதா என்பது குறித்து 13ஆம் திகதி அறிவிப்பதாகவும் ராஜிதன சேனாரத்ன கூறியுள்ளார்.

0 Responses to மஹிந்த வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ள போதிலும், மைத்திரியினால் இறுதி செய்யப்படவில்லை: ராஜித சேனாரத்ன