கூட்டமைப்பு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் தான் போட்டியிடவுள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியாவில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களுடைய கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே இன்று வேட்புமனுக்கள் கையளிக்கப்படவுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசன ஒதுக்கீடு வவுனியா கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மாவை சேனாதிராஜா முதன்மை வேட்பாளராகவும், வன்னி மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் முதன்மை வேட்பாளராகவும், திருகோண மலை மாவட்டத்தில் இரா.சம்பந்தன் முதன்மை வேட்பாளராகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பொன் செல்வராசா முதன்மை வேட்பாளராகவும், அம்பாறை மாவட்டத்தில் ஹென்றி மகேந்திரன் முதன்மை வேட்பாளராகவும் களமிறங்க வுள்ளனர்.
அதேநேரம், யாழ் மாவட்டத்தில் ஈ.பி.டி.பி உள்ளிட்ட மேலும் சில கட்சி களும், சுயேச்சைக் குழுக்களும் இன்றைய தினம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளன.

0 Responses to தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்பு மனுத் தாக்கல்!