Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமானது என்று அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

உயர்மட்ட அரசியல் பிரமுகர்கள் ஒன்றுகூடி ஊழல் மிக்க மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலில் களமிறக்க திட்டம் தீட்டியிருக்கலாமென சந்தேகிக்கப்படுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான சூழலை பெற்றுத் தந்திருப்பதாக சுட்டிக்காட்டிய ரஞ்சன் ராமநாயக்க, அதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரவேசம் தேர்தல் களத்தில் விறுவிறுப்புடன் கூடிய கடும் போட்டியை ஏற்படுத்தியிருப்பது ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை உற்சாகப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பலர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கருத்து தெரிவிக்கின்ற போதும், ஜனாதிபதியவர்கள் எக்காரணம் கொண்டும் மஹிந்தவுக்கு வழங்கிய சந்தர்ப்பத்தை வாபஸ் பெற்றுவிடக்கூடாது என்பதே எனது கோரிக்கையாகும்.

மஹிந்தவை தேர்தலில் களமிறக்கியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய உயர்மட்ட அரசியல் பிரமுகர்களால் வகுக்கப்பட்ட திட்டமென பலரும் கூறுகின்றனர். உண்மை இதுவாக இருப்பினும் மஹிந்தவின் பிரவேசம் தேர்தல் களத்தை விறுவிறுப்படைய செய்துள்ளது என்பது தான் உண்மையென்றும் அவர் கூறினார்.

ஜனவரி 08 ஆம் திகதி வரையில் மஹிந்த ராஜபக்ஷ என்பவர் ஒரு திருடர், மோசடியாளர் என பிரசாரம் செய்து வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இப்போதும் கூட மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு கூறமுடியாது. ஏனெனில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே முதுகெலும்புடைய ஒரே நபர் அவர் மாத்திரமேயாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்தார். அதேபோன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாத்தார். இது ஒருவித அர்ப்பணிப்பு ஆகும். இதனை எவராலும் பிரிக்க இயலாது.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த தேர்தலில் போட்டியிடுவது ஐ.தே.க.வுக்கு சாதகமானது: ரஞ்சன் ராமநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com