எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று அக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வேட்புமனு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை. எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னைய மற்றும் இன்றைய ஜனாதிபதிகள் ஒரே அணியில் இணைந்து செயல்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று எதிர்கட்சித் தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவருவான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்தவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை: சுசில் பிரேமஜயந்த