சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று தலைமைச் செயலகம் வந்தார் முதலமைச்சர் ஜெயலலிதா.
ஜெயலலிதா தலைமைச் செயலகம் வருவதில்லை, அவருக்கு உடல்நிலை சரியில்லை, அதிமுக தலைமையிலான தமிழக அரசு செயலிழந்து கிடக்கிறது என்று பலவாறாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இன்று அத்திப் பூத்தாற்போல ஜெயலலிதா தலைமைச் செயலகம் வந்தார்.11 நாட்களுக்குப் பிறகு அவர் தலைமைச் செயலகம் வந்துள்ளார் என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.
தலைமைச் செயலகம் வந்த ஜெயலலிதா நலத்திட்டங்களை விரைந்து முடிப்பதுக் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். காணொளிக் காட்சி மூலம் புதிய நலத்திட்டங்களைத் துவக்கி வைத்தார். தமது அறையில் இருந்து பணிகளை மேற்கொண்டார்.மதியம் 1 மணிக்கு தமது இல்லத்திலிருந்து புறப்பட்ட அவர், 1 மணி 6 நிமிடங்களில் தலைமைச் செயலகத்தை வந்தடைந்தார்.

0 Responses to தலைமைச் செயலகம் வந்தார் ஜெயலலிதா