சன் குழும பண்பலை வானொலிகளுக்கும் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கினால் மட்டுமே பண்பலை வானொலிகள் இயங்க அனுமதி கேட்கும் ஏல முறையில் பங்கேற்க முடியும். இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் தொடர்புத் துறை பண்பலை வானொலிகள் தொடர்ந்து சேவையை செய்ய ஏலமுறையை அறிவித்துள்ளது.இந்த ஏலத்தில் ஏற்கனவே இயங்கி வரும் பண்பலை வானொலிகள் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும்.அதே சமயம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புச் சான்றிதழும் இருந்தால்தான் ஏல முறையில் பங்கேற்க முடியும்.
சன் குழுமத்துக்கு பாதுகாப்புச் சான்றிதழ் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ள நிலையில், சன் பண்பலை வானொலிகளும் ஏலத்தில் பங்கேற்ற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால் சன் குழும பண்பலை வானொலிகள் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

0 Responses to சன் குழும பண்பலை வானொலிகளுக்கும் சிக்கல்!