Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தினூடாக உருவாக்கப்பட்ட அரசமைப்பு பேரவை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை முதற்தடவையாக கூடியது.

இதன்போது, அரசமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பிலான சர்ச்சைகள் நீடிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. அதன்போக்கில், சட்டமா அதிபரிடம் ஆலோசனைகளைக் பெற்றுக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் கூடுவததென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற அரசமைப்புப் பேரவைக் கூட்டத்தில், பேரவையின் உறுப்பினர்களான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஜோன் செனவிரட்ன, இரா.சம்பந்தன் ஆகிய ஆறு பேர் பங்கேற்றுள்ளனர்.

எனினும், ஜனாதிபதியின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை.

0 Responses to அரசமைப்பு பேரவை கூடியது: சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் ஆலோசனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com