Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி வெற்றிச் சான்றிதழை காண்பித்து, இன்று ஆர்.கே.நகர் தொகுதி எம் எல் ஏவாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிட்டு சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிக்கொண்டார் முதல்வர் ஜெயலலிதா. இந்த வெற்றிச் சான்றிதழை சபாநாயகர் தனபாலிடம் காண்பித்து, சபாநாயகர் மற்றும் துணைச் செயலர் அழைப்பு விடுக்க ஆர்.கே.நகர் தொகுதி எம் எல் ஏவாக இன்று உறுதி மொழி அளித்து ஜெயலலிதா பதவி ஏற்றுக்கொண்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முழுமையாக விடுதலைப் பெற்ற ஜெயலலிதா மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றிப் பெற்றார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆர்.கே.நகர் தொகுதி எம் எல் ஏவாக ஜெயலலிதா பதவி ஏற்றார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com