ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கூட்டணியைவிட தற்போது உருவாகியிருக்கும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி சிறியது. அது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அச்சுறுத்தலானது அல்ல என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14க்கும் அதிகமான மாவட்டங்களில் வெற்றிபெற்று புதிய அரசாங்கத்தை அமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற பாரியதொரு கூட்டணி இருந்தது.
எனினும், தற்பொழுது உருவாகியுள்ள கூட்டணி கடந்த தேர்தல் கூட்டணியுடன் ஒப்பிடும் போது சிறியது. ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 57 இலட்சம் வாக்குகள் கிடைத்திருந்தன. இது எமது கட்சிக்கான வாக்குகள்.
160 தொகுதிகளில் நாம் 89 தொகுதிகளை வென்றிருந்தோம். 13 தேர்தல் மாவட்டங்கள் எம்மால் வெற்றிக்கொள்ளப்பட்டன. 4 தொகுதிகளில் சுமார் 4 ஆயிரம் வாக்கு வித்தியாசங்களால் தோல்வியுற்றோம். பொலனறுவை மாவட்டத்தில் இம்முறை இரட்டை வெற்றிகிடைக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 மாவட்டங்களை வெல்லும். எனவே சுமார் 14ற்கும் அதிகமான தேர்தல் மாவட்டங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிகொள்ளும்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம்வகித்த சிலர் வெளியேறி கூட்டணி அமைத்துள்ளனர். இது எமக்கு சவாலாக அமையாது. கட்சிக்குள் எதுவித பிளவும் இல்லை. வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதும் நாளை முதல் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கவுள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி சுதந்திரக் கட்சிக்கு அச்சுறுத்தலானது அல்ல: சுசில் பிரேமஜயந்த