Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இவ்வருடம் ஜூன் 12 ஆம் திகதி தனது 91 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடி இருந்த அமெரிக்க முன்னால் அதிபரான ஜோர்ஜ் H.W.புஷ் நேற்று புதன்கிழமை மைனேவின் கென்னெபுங்போர்ட் நகரிலுள்ள அவரது கோடைக்கால விடுமுறை இல்லத்தில் கீழே தவறி வீழ்ந்ததில் கழுத்து முதுகெலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டு அருகே உள்ள போர்ட்லேன்ட் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் அவரின் உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை என்றும் தற்போது போதிய உடல் நலத்துடனேயே உள்ளதாகவும் அவரின் ஊடகப் பேச்சாளர் மெக் கிராத் தெரிவித்துள்ளார். பதவி விலகிய காலத்தில் இருந்தே ஜோர்ஜ் H.W.புஷ் ஓரிடத்தில் நிலையாக நீண்ட காலம் வசிப்பதில்லை என்றும் சுற்றுலாவில் ஆர்வமுள்ளவர் என்றும் கூறப்படுகின்றது. ஏற்கனவே பல காலமாக இவர் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப் பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மூச்சுத் திணறல் காரணமாக 2014 இலும் வேறு காரணத்தால் 2012 இலும் பல மாதங்கள் இவர் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்றவர் ஆவார். இவரின் மூத்த மகன் ஜோர்ஜ் W புஷ் ஏற்கனவே அமெரிக்க அதிபராகப் பதவி வகித்திருந்த நிலையில் தற்போது இவரின் இளைய மகன் ஜெப் புஷ் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்க முன்னால் அதிபர் H.W.புஷ் வைத்திய சாலையில் அனுமதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com