Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் வடக்கு- கிழக்கு பகுதிகளில் அமைதி காக்கும் பணிக்காக வருகை தந்த இந்திய இராணுவம் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் வைத்து நோயாளர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட 68 பேரினை படுகொலை செய்து இன்றோடு 28வது ஆண்டுகள் நிறைகின்றது.

அதன், அஞ்சலி நிகழ்வுகள் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை இடம்பெற்றன.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு தினங்களாக யாழ் போதனா வைத்தியசாலைக்குள் இருந்தவர்கள் மீது இந்திய இராணுவம் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. இதில், 68 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

0 Responses to இந்திய இராணுவம் யாழ் வைத்தியசாலைக்குள் படுகொலை செய்த 68 பேரின் 28வது நினைவு தினம் இன்று!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com