Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மூன்று வாரங்களுக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

இந்த உறுதிமொழிமையை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரிடம் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி வழங்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மகசின் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ விடுத்திருந்த கோரிக்கை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும், தானும் நேற்றையதினம் அமைச்சரை அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும், இதன்போது தம்முன்னால் ஜனாதிபதியை தொலைபேசியில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தொடர்புகொண்டு பேசியதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் தொலைபேசியில் பேசியுள்ளார். ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 07ஆம் திகதிக்குள் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வொன்றை வழங்குவதாக ஜனாதிபதி, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடமும், இரா.சம்பந்தன் ஐயாவிடமும் கூறியுள்ளார்.

என்ன நடைமுறையின் கீழ் இவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பது என்பது பற்றி அமைச்சரவையில் கலந்துரையாடப்படும் என்றும், கைதிகளால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறையாகவே அது இருக்கும் என்பதையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டை கைதிகளுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமது விடயத்தில் ஜனாதிபதி நேரடியான அறிவிப்பொன்றை வெளியிடும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப்போவதில்லையென கைதிகள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளுக்கு மூன்று வாரங்களுக்குள் தீர்வு; ஜனாதிபதி உறுதியளிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com