Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரயில்களில் பட்டாசுகள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று, தென் மண்டல ரயில்வே துறை கூடுதல் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

ரயில்களில் பட்டாசு, பெட்ரோல், டீசல்,மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பொது மக்கள் கொண்டு செல்ல ஏற்கனவே விதிக்கப்பட்டத் தடை அமலில் உள்ளது.எனினும், அடுத்தடுத்து பண்டிகை தினங்கள் வருவதால் மக்கள் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்வது இப்போது அதிகமாகும் என்று இத்திட்டத்தைத் தீவிரமாகக் கண்காணிக்க ரயில்வே துறை முடிவெடுத்து உள்ளது.

அதன்படி தீபாவளிக்கு என்று ரயில்களில் சொந்த ஊருக்குப் பயணிக்கும் பொதுமக்களிடம் ரயில்வே போலீசார் தீவிரமாக சோதனையிடத் திட்டமிட்டு உள்ளனர்.அதோடு ரயில்களில் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்துத் தெரிவிக்க 1512 என்கிற தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்புக் கொண்டு முறைகேடுகள், ஆபத்துக்கள் குறித்துத் தெரிவிக்கலாம் என்றும் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

0 Responses to ரயில்களில் பட்டாசுகள் எடுத்துச் செல்லத் தடை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com