Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் வெளியில் சுதந்திரமாக நடமாடும்போது சாதாரண கைதிகளை, அரசியல் கைதிகள் என்று அடைத்து வைத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “நீண்டகாலமாக சிறைகளில் வாடும் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றைனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்களும், மாணவர்களும், போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அனைத்து அரசியல் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது.

கடந்தக் காலங்களில் எமது நாட்டில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுக்கு முற்று முழுவதுமாக ஒத்துழைப்புத் தந்த பெரும்பாலான உறுப்பினர்கள் இன்று சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது, வெறுமனே இவர்களை மட்டும் அரசியல் கைதிகளாக எந்த ஒரு விசாரணைகளும் இன்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைத்திருப்பதானது அர்த்தமற்றது.

எமது நாட்டில் கடந்த காலங்களில் விடுதலைக் புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கையின் போது எமது இராணுவத்தினர் தமது உயிரையும் பொருட்படுத்தாது எமது நாட்டை மீட்டெடுத்தனர். இவ்வாறான நிலையில் விடுதலை புலிகளின் செயற்பாடுகளுக்கு நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தவர்களும் கே.பி. என குறிப்பிடப்படும் குமரன் பத்மநாதன் உட்பட சில உறுப்பினர்கள் சுதந்திரமாக செயற்படும் போது இவர்களை மட்டும் எவ்வித விசாரணைகள் இன்றி நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சலைகளில் தடுத்து வைத்திருப்பதானது அர்த்தமற்ற செயல் என்றே குறிப்பிட வேண்டும். இதற்கு தீர்வாக அரசாங்கம் இவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாயின் எந்தச் சிக்கலும் இல்லை.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைப்பதில் எந்தப் பயனுமில்லை: சரத் பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com