Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் முன்வைத்த தீர்மானம் ஆகியன தொடர்பில் உள்நாட்டின் அரசியலமைப்புக்கு ஏற்ப பதிலளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஆராயும் சர்வகட்சித் தலைவர்கள் சந்திப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கம் என்ற வகையில் ஐக்கிய நாடுகளின் அறிக்கை மற்றும் தீர்மானம் உள்ளிட்டவற்றை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் அவர்களது கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த சர்வகட்சி மாநாடு அமைந்துள்ளது. நாட்டு மக்களின் ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் என்பன பாதுகாக்கப்படல் வேண்டும். எனவே உங்களது நிலைப்பாடுகளை கடிதம் மூலம் இரண்டு வாரத்துக்குள் அறியத்தரும்படி கேட்டுக்கொள்கின்றேன்.” என்றுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட 21 கட்சிகளின் முக்கியஸ்தர்கள் நேற்றைய சர்வகட்சித் தலைவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

0 Responses to ஐ.நா. அறிக்கையை அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்கொள்ள வேண்டும்: சர்வகட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com