Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து கடற்படை வீரர்களுக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி, நடராஜா ரவிராஜ் கொழும்பில் வைத்து சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பில், கடற்படை வீரர்கள் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டதுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

0 Responses to ரவிராஜ் படுகொலை சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com