Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருகோணமலையில் 2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த உடலாகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் கடத்தல்கள், காணாமற்போதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் இறுதி விசாரணை அறிக்கைகள் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

அத்தோடு, இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மான அறிக்கையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கைகள் மீதான பாராளுமன்ற குழு நிலை விவாதம் நாளை வியாழக்கிழமையும், நாளைமறுதினம் வெள்ளிக்கிழமையும் இடம்பெறவுள்ளது.

0 Responses to உடலாகம - மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com