Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு பூராவுமுள்ள சிறைகளில் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்திலிருந்து ஆரம்பிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் மனோ கணேசன் பி.பி.சி.யிடம் கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராயும் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. அதில், மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பன, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் அலுவலக உயரதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிணை வழங்குவது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டதாகவும், சட்டத்துக்கு உட்பட்டு, இயன்ற அளவில் தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளை பிணைவில் விடுவிக்க நடவடிக்கை; ரணில் பணிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com