Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம், சிங்களப் பெரும்பான்மை மக்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை அன்பளிப்பாக வழங்கிவிட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான முயற்சிகளில் நோர்வேயின் வகிபாகம் குறித்த நூலொன்று நேற்றுமுன்தினம் புதன்கிழமை இலண்டனில் வெளியிடப்பட்டது.

மார்க் சோல்டர் என்ற ஆய்வாளரினால் இயற்றப்பட்ட 'சிவில் யுத்தமொன்றை முடிவுக்குக் கொண்டுவர இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சி' என்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில், நோர்வேயின் இலங்கைக்கான சமாதான தூதுவராகப் பலவருடங்கள் பணிபுரிந்த எரிக் சொல்ஹெய்மும், முன்னாள் நோர்வே அமைச்சர் விதார் ஹெல்கிசனும் கலந்துகொண்டனர்.

அங்கு உரையாற்றிய எரிக் சொல்ஹெய்ம், இலங்கையில் புதிய ஆட்சி ஏற்பட்டிருப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்கின்றபோதிலும், ஈழத்தமிழர்கள் களத்திலும், புலத்திலும் தொடர்ச்சியாகப் பல்வேறு வழிகளில் போராட்டங்களை மேற்கொள்வதன் ஊடாகவே தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். சிங்களவர்கள் தமிழர்களின் அரசியல் உரிமைகளை ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவது கிடையாது.

இலங்கையில் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையான சிங்கள மக்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களித்திருந்தனர். தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்தே ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது. புதிய அரசு நேர்த்தியான வழியில் சமாதான முயற்சிகளில் ஈடுபட சர்வதேச சமூகம் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to உரிமைகளுக்காக தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com