Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச அரசியல் பழிவாங்கல் காரணமாக கைது செய்யப்படவில்லை என்று அமைச்சரமைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமை மீறப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதாலே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதில் தலையீடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அங்கு, விமல் வீரவங்சவின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையா?, என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டாறு கூறியுள்ளார்.

கயந்த கருணாதிலக மேலும் தெரிவித்துள்தாவது, “செல்லுபடியற்ற கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயன்றதாக தெரிவித்து விமல் வீரவங்க கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தினேஷ் குணவர்தன கேள்வியெழுப்பியதையடுத்தே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதில் தலையீடு செய்தார்.

அது தவிர அவர் எதுவித சட்டமீறலும் மேற்கொள்ளவில்லை. இந்த விடயத்தில் அரசாங்கம் எந்தவித அரசியல் பழிவாங்கலும் செய்யவில்லை. அநியாயம் செய்யும் நோக்கம் எமக்கு கிடையாது. சட்டத்திற்கு உட்பட்டதாகவே விமல் வீரவங்சவின் விடயம் கையாளப்பட்டது.

பொதுவாக இவ்வாறான சந்தர்ப்பங்களில் அநீதி இழைக்கப்படுவது வழமை. ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையை பாதுகாக்கவே அரசாங்கம் தலையீடு செய்தது. எனினும், தன்னை பழிவாங்குவதாக விமல் வீரவங்ச கூறிவருகின்றார்.” என்றுள்ளார்.

0 Responses to விமல் வீரவங்சவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல: கயந்த கருணாதிலக

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com