Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இலங்கை இராணுவமோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ குற்றம் இழைத்ததாக தாம் உறுதியாக கூறவில்லை என்று கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரான மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “எமது ஆணைக்குழு நியமிக்கப்பட்டது இரு விடயங்களுக்காக, ஒன்று யுத்த காலத்தில் காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வது.

மற்றையது, இறுதி மோதல்களின் போது இரு தரப்பினராலும் மனித உரிமைகள் மீறப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்ந்து யாரேனும் தவறிழைத்துள்ளனரா?, எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காதிருக்க என்ன செய்ய வேண்டும் எனக் கூறுவதற்காகவே.

இது குறித்து ஆராய்ந்து நாம் சமர்ப்பித்த அறிக்கையே பாராளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை தொடர்பில் இன்று வியாழக்கிழமை விவாதம் இடம்பெறவுள்ளது.

அத்துடன், இறுதி மோதல்களின் போது 40,000பேர் இறந்ததாக கூறப்பட்ட தருஸ்மான் அறிக்கையை நாம் நிராகரிக்கின்றோம். ஐக்கிய நாடுகளின் அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளை வைத்து பார்க்கும் போது, 7400 - 7500 பேர் வரையிலேயே பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் விடுதலைப் புலிகளோ, இராணுவமோ குற்றம் இழைத்ததாகவும், அது நிரூபிக்கப்பட்டதாகவும் நாம் எங்கும் கூறவில்லை. யுத்தத்தின் போது சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக எம்மிடம் கூறப்பட்டுள்ளது. நாம் நடைபெற்றதாக உறுதியாக கூறவில்லை. நாம் விசாரணை ஆணைக்குழுவுக்கு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க கூறியுள்ளோம். அதன் பின்னே முடிவெடுக்க முடியும்.

விஷேடமாக சனல் 4, வௌ்ளைக் கொடி விவாகரம், வைத்தியசாலைகளுக்கு தாக்குதல் மேற்கொண்டமை, இராணுத்திடம் சரணடைந்தவர்கள் உள்ளிட்டவை தொடர்பில் விசாரணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவமோ, புலிகளோ குற்றம் இழைத்ததாக நாம் உறுதியாக கூறவில்லை: மக்ஸ்வெல் பரணகம

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com