Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மூன்று தசாப்த காலத்தைத் தாண்டி நீடித்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தேசமான இலங்கையில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சமாதானத்திற்கான சர்வதேச சமய மாநாட்டின் பிரதிநிதிகள் குழு நேற்று புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார்கள். இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிகழ்ச்சித் திட்டங்களை இந்தச் சந்திப்பின்போது பாராட்டிய சமயத் தலைவர்கள், இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் வெற்றிக்கு தங்களது நல்லாசிகளையும் தெரிவித்துள்ளனர்.

சகல இனங்களுக்கிடையேயும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப அரசு முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றிபெறச் செய்வதற்கு சகல சமயத் தலைவர்களினதும் உதவி அவசியமானது இதன்போது ஜனாதிபதி கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச மட்டத்தில் இலங்கை சார்பாக சமயத் தலைவர்களின் தலையீடு அவசியமானதாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, சமாதானத்திற்கான சமய மாநாடு போன்ற சந்தர்ப்பங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கையில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது: சர்வமத பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com