ஊழல் மோசடி விசாரணைகளை எதிர்கொள்வது துன்புறுத்தலாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் இன்று வெள்ளிக்கிழமை வாக்குமூலமளிக்க வந்த முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு நேற்று வியாழக்கிழமையும் சமுகமளித்திருந்தார்.
சுயாதீனத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கப்படவேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறவே அவர் அழைக்கப்பட்டிருந்தார். அவர், ஆணைக்குழுவின் முன்னிலையில், கடந்த 15ஆம் 16ஆம் திகதிகளிலும் ஆஜராகியிருந்தார். அவர், இன்று வெள்ளிக்கிழமையும் ஆஜராகியுள்ளார்.

0 Responses to விசாரணைகளை எதிர்கொள்வது துன்புறுத்தலாக உள்ளது: மஹிந்த